LibreOffice 7.3 உதவி
LibreOffice இலுள்ள சில சாளரங்கள் பொருத்தப்படக்கூடியவை, மாலுமி சாளரத்தைப் போன்று. நீங்கள் இந்தச் சாளரங்களை நகர்த்தவோ, அளவுமாற்றவோ விளிம்பில் அவற்றை பொருத்தவோ செய்யலாம்.
ஒரு சாளரத்தைப் பொருத்த, பின்வருனவற்றுள் ஒன்றைச் செய்க:
சாளரத்தை அதன் தலைப்புப்பட்டையைக் கொண்டு இழுக்கவும், அல்லது
கட்டளைCtrl விசையை அழுத்திக்கொண்டே சாளரத்தின் காலி பரப்பில் உள்ளே இருமுறை சொடுக்கவும். கட்டளைCtrl விசையை அழுத்திக்கொண்டே பாணிகள் சாளரத்தில், படவுருக்களில் அருகேயுள்ள சாளரத்தின் சாம்பல் பகுதியை இருமுறை சொடுக்கவும். மாற்றாக, கட்டளைCtrl+Shift+F10 ஐத் அழுத்துக.
இந்த வழிமுறையானது, நடப்பில் பொருத்தப்பட்ட சாளரத்தைக் கழற்றுவதற்கும் பயன்படுத்தலாம்.
பொருத்தப்பட்ட சாளரத்தைக் காட்டவும் மறைக்கவும் பொருத்தப்பட்ட சாளரத்தின் விளிம்பிலுள்ள பொத்தானைச் சொடுக்குக. தன்னியக்க மறை செயலாற்றியானது மறைக்கப்பட்ட சாளரத்தை அதன் விளிம்பில் சொடுக்குவதன் மூலம் நீங்கள் அதனைத் தற்காலிகமாகத் காட்ட அனுமதிக்கிறது. நீங்கள் ஆவணத்தில் சொடுக்கும்போது, பொருத்தப்பட்ட சாளரம் மீண்டும் மறைகிறது.