கருவிகள் பட்டை
கருவிகள் பட்டை அடிக்கடி பயன்படும் செயலாற்றிகளைக் கொண்டுள்ளது.
பெருக்கம்
25% இல் சூத்திரத்தின் காட்சி ஒப்பளவை அதிகரிக்கிறது. நடப்பு உருவளவு காரணி நிலைப்பட்டையில் காட்சியளிக்கப்படுகிறது. கிடைக்கும் உருவளவுத் தெரிவுத் தேர்வுகள் சூழல் பட்டி மூலம் அணுகக்கூடியவை. பணியிடத்திலுள்ள சூழல் பட்டியானது உருவளவு கட்டளைகளையும் கொண்டுள்ளது.
சிறிதாக்கு
25%இல் சூத்திரத்தின் காட்சி ஒப்பளவைக் குறைக்கிறது. நடப்பு உருவளவு காரணி நிலைப்பட்டையில் காட்சியளிக்கப்படுகிறது. கிடைக்கும் உருவளவுத் தேர்வுகளின் தெரிவு சூழல் பட்டி மூலம் அணுகக்கூடியது. பணி பரப்பிலுள்ள சூழல் பட்டி உருவளவு கட்டளைகளைக் கொண்டுள்ளது.
அனைத்தும் காட்டு
சூத்திரம் முழுவதையும் சாத்தியமான அதிகபட்ச அளவில் காட்சியளிக்கிறது. அதனால், அனைத்துத் தனிமங்களும் உட்படுத்தப்படுகின்றன.சூத்திரம் குறைக்கவும் பெருக்கவும் படுகிறது. அதனால், அனைத்துச் சூத்திரத் தனிமங்களும் பணிப் பரப்பில் காட்சியளிக்க முடிகின்றன. நடப்பு உருவளவு காரணி நிலைப்பட்டையில் காட்சியளிக்கப்படுகின்றது. கிடைக்கும் உருவளவுத் தேர்வுகள் சூழல் பட்டி மூலம் அணுகக்கூடியவைகளாகும். பணிப்பரப்பிலுள்ள சூழல் பட்டி உருவளவு கட்டளைகளைக் கொண்டுள்ளது. உருவளவு கட்டளைகளும் படவுருக்களும் மேத் ஆவணங்களில் மட்டுமே கிடைக்கும், உட்பொதிந்த மேத் பொருள்களுக்களுக்கு அல்ல.
புதுப்பி
இந்தக் கட்டளை ஆவணச் சாளரத்திலுள்ள சூத்திரத்தைப் புதுப்பிக்கிறது
தானிப்புதுப்பிப்புக் காட்சி செயல்படுத்தப்பட்டல் மட்டுமேகட்டளைச் சாளரத்திலுள்ள மாற்றங்கள் தானகவே புதுப்பிக்கப்படுகின்றன.