பொது

பொது கீற்று நீங்கள் படிவக் கட்டுப்பாட்டின் பொது பண்புகளை வரையறுக்க உதவுகிறது. இந்தப் பண்புகள், கட்டுப்பாடு வகைகளுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. பின்வரும் அனைத்துப் பண்புகளும் ஒவ்வொரு கட்டுப்பாடுகளுக்கும் கிடைப்பதில்லை.

இக்கட்டளையை அணுக...

Open context menu of a selected form element - choose Control - General tab.

Open Form Controls toolbar or Form Design toolbar, click Control icon - General tab.


Note Icon

நீங்கள் நடப்பு படிவ ஆவணத்தை HTML படிவத்திற்கு ஏற்றுமதி செய்தால், முன்னிருப்புக் கட்டுப்பாடு மதிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நடப்புக் கட்டுப்பாட்டு மதிப்புகள் அல்ல. முன்னிருப்பு மதிப்புகள் கட்டுப்பாடு வகை அடிப்படையில் - பண்புகளினால்முன்னிருப்பு மதிப்பு (எ.கா. உரைப் புலங்களில்), முன்னிருப்பு நிலை (சோதனைப் பெட்டிகளுக்கும் தேர்வுப் புலங்களுக்கும்), மற்றும் முன்னிருப்புத் தெரிவு (பட்டியல் பெட்டிகளுக்கும்) தீர்மானிக்கப்படிகின்றன.


URL

. URL பெட்டியிலுள்ள ஆவணம் அல்லது வலைப் பக்கம் திற பொத்தான் வகைக்கான URL முகவரியை உள்ளிடுக. நீங்கள் பொத்தானைச் சொடுக்கும்போது முகவரி திறக்கிறது.

.பயனர் பயன்முறையில் பொத்தானை சுட்டி சுட்டெலியை நகர்த்தினால், URL நீட்டித்த சிறுதுப்பாகத் தோன்றுகிறது. வேறு எந்த உதவி உரையும் நுழைக்கப்படவில்லை.

அகலம்

LibreOffice நிரல்கூறு தேர்வில் குறிப்பிட்ட அலகுகளில் நிரல் அகலத்தை அட்டவணைக் கட்டுப்பாட்டுப் புலத்தில் அமைக்கிறது. நீங்கள் விரும்பினால், மதிப்பைத் தொடர்ந்து சரியான அளவீட்டு அலகை உள்ளிட முடியும். எ.கா,2 செ.மீ.

அகலம்

கட்டுப்பாட்டின் அகலத்தை வரையறுக்கிறது.

அச்சிடக்கூடிய

உங்களுக்கு கட்டுப்பாட்டுப் புலம் ஆவணத்தின் அச்சுப் பிரதியில் தோன்ற வேண்டுமா என்பதைக் குறிப்பிடுகிறது.

அதிகபட்ச உரை நீளம்

உரை, சேர்க்கைப் பெட்டிகளுக்கு,பயனர் உள்ளிடக்கூடிய வரியுருவின் அதிகபட்ச எண்ணிக்கையை நீங்கள் வரையறுக்கலாம்.இந்த கட்டுப்பாட்டு புலம் பண்பு நிலையற்றதாக இருந்தால், முன்னிருப்பு அமைப்பு சுழியமாக இருக்கும்.

கட்டுப்பாடு தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டிருந்து, உரையின் நீளமும் தரவுத்தளத்தின் புல வரையறையிலிருந்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றால், நீங்கள் உரஈயின் நீளத்தை இங்குகண்டிப்பாக உள்ளிடக்கூடாதுகட்டுப்பாட்டுப் பண்புகள் வரையறுக்கப்படவில்லை ("வரையறுக்கப்படவில்லை") என்றால் மட்டுமே அமைவுகள் தரவுத்தளத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்படுகின்றன

அதிகபட்ச நேரம்.

பயனர் அறிமுகப்படுத்தும் மற்றொரு மதிப்பால் மீற முடியாத ஒரு தேதியைத் தீர்மானிக்கிறது.

அதிகபட்ச மதிப்பு.

எண்ணியல், நாணய புலத்திற்கு, பயனர் உள்ளிடக்கூடிய அதிகபட்ச மதிப்பை நீங்கள் தீர்மானிக்கலாம்.

அதிகபட்ச மதிப்பை உருட்டு.

சுருள்பட்டை கட்டுப்பாட்டின் அதிகபட்ச மதிப்பைக் குறிப்பிடுக.

அதிகபட்சம் தேதி

பயனர் அறிமுகப்படுத்தும் மற்றொரு மதிப்பால் மீற முடியாத ஒரு தேதியைத் தீர்மானிக்கிறது.

அதிகரிக்கும்./குறையும் மதிப்பு

சுழல் பொத்தான் கட்டுப்பான் ஒவ்வொரு இயக்கத்திலும் இடைவேளைகளைச் சேர்ப்பது அல்லது கழிப்பதைத் தீர்மானிக்கிறது.

ஆயிரம் பிரிப்பிகள்

எண்ணியல், நாணய புலங்களைக் கொண்டுஆயிரக்கணக்கான பிரிப்பிகளைப் பயன்படுத்தலாமா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும்.

இடம் X

நங்கூரத்தின் தொடர்புடைய, கட்டுப்பாட்டின் X இடத்தை வரையறுக்கிறது.

இடம் Y

நங்கூரத்தின் தொடர்புடைய, கட்டுப்பாட்டின் Y இடத்தை வரையறுக்கிறது.

உதவி URL

URL எழுத்துக்கூட்டில், ஓர் உதவி ஆவணத்திற்குக் குறிக்கும் கட்டுப்பாட்டுப் புலத்தின் உதவியால் அழைக்கப்படும் ஒரு விளக்கச்சீட்டு அணியைக் குறிப்பிடுகிறது. குவியமானது கட்டுப்பாட்டுப் புலத்தில் வைக்கப்பட்டிருந்து, பயனர் F1ஐ அழுத்தினால் கட்டுப்பாட்டுப் புல உதவிக்கான உதவியைத் திறக்கலாம்.

உதவி உரை

கட்டுப்பட்டில் சிறுடுப்பாகக் காட்சியளிக்கப்படும் உதவி உரையை நுழைப்பதற்கான தேர்வினை வழங்குகிறது.கட்டுப்பாட்டில் சுட்டெலி நகர்த்தப்படும்பொழுது சிறுதுப்பு உரையைப் பயனர் முறையில் காட்டுகிறது.

URL வகைபொத்தான்களுக்கு, உதவி உரையானது URL கீழ் உள்ளிட்ட URL முகவரிக்குப் பதிலாக நீட்டித்த சிறுதுப்பாகத் தோன்றுகிறது.

உதவி உரை

ஒவ்வொரு கட்டுப்பாட்டுப் புலத்திலும் நீங்கள் கட்டுப்பாட்டுப் புலத்திற்கான கூடுதல் தகவலையோ விளக்க உரையையோ குறிப்பிட் முடியும். நிரல் குறியீட்டில் பயன்படுத்தக்கூடிய கூடுதல் தகவலை சேமிக்க இந்தப் பண்பு நிரலாளருக்கு உதவுகிறது. எ.கா, மாறிகளுக்கோ மற்ற மதிப்பீட்டு அளவுருக்களுக்கோ இந்த புலத்தைப் பயன்படுத்த முடியும்.

உயரம்

கட்டுப்பாட்டின் உயரத்தை வரையறுக்கிறது.

உரை வகை

கட்டுப்பாட்டுப் புலத்தில் நீங்கள் வரி முறிப்புகளையும் வடிவூட்டையும் பயன்படுத்த அனுமதிக்கிறது. எ.கா: உரைப் பெட்டி அல்லது விளக்கச்சீட்டு. வரி முறிப்பை கைமுறையாக உள்ளிட, உள்ளிடு விசையை அழுத்தவும். வடிவூட்டிய உரையை உள்ளிட " வடிவூட்டலுடன் பல-வரி" ஐத் தேர்க.

Warning Icon

"பல - வரி- வடிவூட்டல்" உரை வகையை நீங்கள் தேர்ந்தால்,இந்த கட்டுப்பாட்டை ஒரு தரவுத்தள புலத்தில் பிணைக்க முடியாது.


Note Icon

ஓர் அட்டவணை கட்டுப்பாடு உள்ளேயுள்ள உரை நிரலுக்கான இந்தக் கட்டுப்பாடு "பலவரி உள்ளீடு" எனும் பெயரிட்டது.


உரை வரிகளுடன் முடிகிறது

உரைப் புலங்களுக்கான, தரவுத்தள நிரலினுள் உரை எழுதுகையில் பயன்படுத்தக்கூடிய வரி முடிவு குறியீட்டைத் தேர்க.

உள்ளீடுகளைப் பட்டியலிடு

விசைப்பலகை கட்டுப்பாடுகளைக் குறிக்கும் சிறுதுப்புகள் ஐத் தயவு செய்து கவனிக்கவும்.

முன்னிருப்புத் தெரிவுச் சேர்க்கை பெட்டியினுள் முன்வரையறுத்த முன்னிருப்புப் பட்டியல் உள்ளீடு உள்ளிடப்படுகிறது.

Note Icon

இங்கு உள்ளிடப்பட்ட பட்டியல் உள்ளீடுகள், பட்டியல் உள்ளடக்க வகை இன் கீழ் தரவு கீற்று படிவத்தில் மட்டுமே இணைக்கப்பட்டு "மதிப்புப் பட்டியல்" தேர்வானது தேர்வு செய்யப்படுவதைக் கவனிக்கவும்.


நீங்கள் பட்டியல் உள்ளீடுகளைத் தரவுத்தளத்தில் எழுததுவதையோ பெறுநருக்கு வலைப் படிவத்தின் பெறுநருக்கு அனுப்பவோ விரும்பவில்லையென்றாலோ ஆனால்,மாறாக வடிவத்தில் தென்படாத மதிப்புகள் ஒதுக்கப்படுகின்றன என்றால் நீங்கள் பட்டியல் மதிப்புகளை மதிப்புப் பட்டியலிலுள்ள மற்ற மதிப்புகளுக்கு அளிக்கலாம். தரவு கீற்றில் மதிப்புப் பட்டியலில் வரையறுக்கப்படுகிறது. உள்ளடக்கங்களின் பட்டியல் வகை இன் கீழ் "மதிப்புப் பட்டியல்" தேர்வைத் தேர்ந்தெடுக. பிறகு பட்டியல் உள்ளடக்கங்கள்இன் கீழ், படிவத்தின் தொடர்புடைய தென்படும் பட்டியல் உள்ளீடுகளுக்கு அளிக்கப்படும் மதிப்புகளை உள்ளிடவும். நடப்பு ஒப்படைக்கு, மதிப்புப் பட்டியலிலுள்ள அடுக்கு ஏற்புடையவையே.

Note Icon

HTML ஆவனங்களுக்கு, பொதுகீற்றில் உள்ளிட்ட ஒரு பட்டியல், HTML குறிச்சொல்<OPTION> க்குப் பொருந்துகிறது; பட்டியல் உள்ளடக்கங்கள்இன் கீழ் தரவுகீற்றில் உள்ளிடப்படும் மதிப்புப் பட்டியல் <OPTION VALUE=...>குறிச்சொல்ல்லுக்குப் பொருந்துகிறது.


எல்லை

சட்டகத்துடனான கட்டுப்பாடுகளுடன், நீங்கள் "எல்லை" பண்பைப் பயன்படுத்தி எல்லை காட்சியளிப்பைத் தீர்மானிக்க முடியும். நீங்கள் "சட்டகம் இல்லாத", "முப்பரிமாண" அல்லது "தட்டை" தேர்வுகளில் தேர்வு செய்ய முடியும்.

எல்லை நிறம்

"தட்டை" ஆக அமைக்கும் "எல்லை பண்பைக்" கொண்ட கட்டுப்பாடிற்கான எல்லை நிறத்தைக் குறிக்கிறது.

எழுத்துரு

தென்படும் உரையையோ தலைப்புகளையோ கொண்டிருக்கும் கட்டுப்பாட்டுப் புலங்களுக்கு, நீங்கள் பயன்படுத்த விரும்பும் காட்சி எழுத்துருவைத் தேர்க.எழுத்துரு உரையாடலைத் திறக்க, ... பொத்தானைச் சொடுக்குக. தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துரு கட்டுப்பாட்டுப் புல பெயர்களாகவும் அட்டவணை கட்டுப்பாட்டுப் புலத்தில் டரவைக் காட்சியளிக்க பயன்படுகின்றன.

ஒப்பளவு

கட்டுப்பாட்டின் அளவுக்கேற்றவாறு அமைய பிம்ப அலவை மாற்றுகிறது.

கடவுச்சொல் வரியுருக்கள்

பயனர் கடவுச்சொல்லை உள்ளிடுகிறார் என்றால், பயனர் தட்டச்சிட்ட வரியுருக்களுக்குப் பதிலாகக் காட்சியளிக்கப்படும் வரியுருக்களை நீங்கள் தீர்மானிக்கலாம். கடவுச்சொல் வரியுருஇன் கீழ், விரும்பிய வரியுருவின் ASCII குறியீட்டை உள்ளிடவும். நீங்கள் 0 இலிருந்து255வரையிலான மதிப்புகளைப் பயன்படுத்த முடியும்.

Tip Icon

வரியுருக்கலையும் அவற்றின் ASCII குறியீடுகளையும் சிறப்பு வரியுருக்கள்உரையாடலில் பார்க்க முடியும் (நுழை - சிறப்பு வரியுரு).


கடுமையான வடிவம்

வடிவூட்டிய உள்ளடக்கங்களை ஏற்றுக்கொள்ளும்(தேதி, நேரம் மற்றும் பல) கட்டுப்பாட்டுப் புலங்களைக் கொண்டு வடிவூட்டுச் சோதனை செய்யலாம்.கண்டிப்பு செயலாற்றி செயலாக்கப்பட்டால், (ஆம்,), அனுமதிக்கப்பட்ட வரியுருக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எ.கா, தேதி புலத்தில் எண்களோ வரம்புக்குறிகளோ ஏற்றுக்கொள்ளப்படுகின்றன;உங்கள் விசைப்பலகை கொண்டு தட்டச்சிடப்பட்ட அனைத்து எழுத்துக்களும் புறக்கணிக்கப்படுகின்றன.

கீற்று நிறுத்தம்

கீற்றுவிசையைக் கொண்டு கட்டுப்பாட்டுப் புலம் தேர்ந்தெடுக்கப்பட்டால், "கீற்றுநிறுத்தம்" தீர்மானிக்கிறது. பின்வரும் தேர்வுகள் கிடைக்கும்:

இல்லை

கீற்று விசையைப் பயன்படுத்துகையில், குவியம் கட்டுப்பாட்ட்டடைத் தவிர்க்கிறது.

ஆமாம்

கீற்று விசையைக் கொண்டு கட்டுப்பாட்டைத் தேர முடியும்.


கீற்று வரிசை

"கீற்று வரிசை"பண்பானது நீங்கள் கீற்று விசையை அழுத்தும்போது படிவத்தில் குவியமாகும் கட்டுப்பாடுகளின் வரிசையைத் தீர்மானிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும் படிவத்தில், நீங்கள்கீற்று விசையை அழுத்தும்போது குவியம் அடுத்த கட்டுப்பாடிற்கு நகர்கிறது."கீற்று வரிசையின்" கீழ் அகவரிசையில் மாறும் குவியத்தில் வரிசையை தீர்மனிக்கலாம்.

Note Icon

"கீற்று வரிசை" பண்பானதுமறைந்துள்ள கட்டுப்பாடுகளில்கிடப்பது இல்லை. உங்களுக்கு வேண்டுமானால், நீங்கள் இந்தப் பண்பினை பிம்பப் பொத்தான்களுக்கும் பிம்ப கட்டுப்பாடுகளுக்கும் அமைக்க முடியும். இதனால், நீங்கள் இந்தப் பண்புகளை கீற்று விசையுடன் தேர முடியும்.


ஒரு படிவத்தை உருவாக்கும்போது, அதில் சேர்க்கப்படும் கட்டுப்பாட்டுப் புலத்திற்கு தானகவே அகவரிசை அளிக்கப்படும்; சேர்க்கப்படும் ஒவ்வொரு கட்டுபாட்டுப் புலத்திற்கும் 1 ஆக அதிகரிக்கும் அகவரிசை அளிக்கப்படும். நீங்கள் கட்டுப்பாட்டின் அகவரிசையை மாற்றினால், மற்ற கட்டுப்பாடுகளின் குறியீடுகள் தானாக புதுப்பிக்கப்படும்.கவனம் செலுத்த முடியாத கூறுகள் ("கீற்றுநிறுத்தம்=இல்லை") ஒரு மதிப்பையும் வழங்கப்படுகின்றன.இருப்பினும்,கீற்று விசையைப் பயன்படுத்தும் போது இந்த கட்டுப்பாடுகள் தவிர்க்கப்படுகின்றன.

நீங்கள் கீற்று வரிசை உரையாடலிலும் நீங்கள் சுலபமாக வெவ்வேறு கட்டுப்பாடுகளின் குறியீடுகளை வரையறுக்க முடியும்.

கீழே இழு

ஒரு சுட்டெலி சொடுக்கின் ஏற்கனவேயுள்ள படிவத்தின் பட்டியலைத் திறக்கும் கூடுதல் அம்புப் பொத்தானை இழுத்துப்போடும் பண்பு கொண்ட கட்டுப்பாட்டு புலமானது கொண்டிருக்கிறது. வரி எண்ணிக்கை கீழ், இழுத்துப்போடு நிலையில் காட்சியளிக்கப்படவேண்டிய வரிகளின் (அல்லது நிரை) எண்ணிக்கையை நீங்கள் குறிப்பிட முடியும்.ஒன்றிணைந்த புலங்கள் இழுத்துப்போடும் பண்பைக் கொண்டிருக்க முடியும்.

நிரல்களக அட்டவணைக் கட்டுப்பாட்டில் நுழைக்கப்பட்ட சேர்க்கைப் பெட்டிகள் எப்போதுமே முன்னிருப்பாக இழுத்துப்போடப்படும்.

குறந்தபட்ச மதிப்பு

எண்ணியல், நாணய புலங்களுக்குப் பயனர் சிறிய மதிப்பை உள்ளிடுவதைத் தடுக்க கட்டுப்பாட்டுப் புலத்திற்கான ஒரு மதிப்பை நீங்கள் இங்கு தீர்மானிக்கலாம்.

குறைந்தபட்ச தேதி

பயனர் உள்ளிடக்கூடிய முந்தைய தேதியைத் தீர்மானிக்கிறது.

குறைந்தபட்ச நேரம்

பயனர் உள்ளிடக்கூடிய குறைந்தபட்ச நேரத்தைத் தீர்மானிக்கிறது.

குறைந்தபட்ச மதிப்பை உருட்டு.

சுருள்பட்டை கட்டுப்பாட்டின் குறைந்தபட்ச மதிப்பைக் குறிப்பிடுக.

சட்டகம்

"திறந்த ஆவணம் அல்லது வலைப் பக்கம் " செயலுக்கு அளிக்கப்பட்ட ஒரு பொத்தானைச் நீங்கள் சொடுக்கும்போது ஒரு URL ஐக் காட்சியளிக்க ஒரு இலக்குச் சட்டகத்தையும் குறிப்பிடலாம்.

நீங்கள் புலத்தைச் சொடுக்கினால், அடுத்த ஆவணம் ஏற்றவேண்டிய சட்டகத்தில் குறிப்பிடுகின்ற பட்டியலிலிருந்து ஒரு தேர்வைத் தேரலாம். பின்வரும் சாத்தியங்கள் ஏற்படுகின்றன:

உள்ளீடு

அர்த்தம்

வெற்றிடம்

அடுத்த ஆவணமானது ஒரு புதுச் சட்டகத்தில் உருவாக்கப்படுகிறது.

_மூலம்

அடுத்த ஆவணமானது மூல சட்டகத்தில் உருவாக்கப்படுகிறது. மூலம் இல்லையென்றால், அதே சட்டகத்தில் ஆவணம் உருவாக்கப்படுகிறது.

_சுய

அடுத்த ஆவணமானது அதே சட்டகத்தில் உருவாக்கப்படுகிறது.

_மேல்

அடுத்த ஆவணம் மேல் மட்ட சாளரத்தில் உருவாகிறது. அதாவது, படிநிலையில் உயர் சட்டகத்தில் ஆகும். ஒருவேளை, நடப்புச் சட்டகமானது ஏற்கனவே உயர் சாளரத்தில் அமைந்திருந்தால், நடப்புச் சட்டகத்தில் ஆவணம் உருவாகுகிறது.


Note Icon

"சட்டகத்தின்" பண்பானது HTML படிவங்களுக்குத் தொடர்புடைய ஆகும். ஆனால், தரவுத்தளப் படிவங்களுக்கு , இல்லை.


சின்னத்தின் நிறம்

கட்டுப்பாடுகளிலுள்ள சின்னங்களுக்கான நிறத்தைக் குறிப்பிடுகிறது. எ.கா: உருள்பட்டையிலுள்ள அம்புகள்.

சிறு மாற்றம்

சுருள்பட்டையிலுள்ள அம்பு படவுருவைப் பயனர் சொடுக்கும்போது சேர்க்க அல்லது குறைக்க வேண்டிய மதிப்பைக் குறிப்பிடவும்.

சீரமைப்பு/ வரைவியல் சீரமைப்பு

சீரமைப்பு தேர்வுகள் வலது, இடது, நடுவில் சீரமைக்கின்றன. இந்தத் தேர்வுகள் பின்வரும் தனிமங்க்ளுக்குக் கிடைக்கின்றன:

  1. விளக்கச்சீட்டு புலங்களின் தலைப்பு,

  2. உரைப் புலங்களின் உள்ளடக்கம்,

  3. அட்டவணை கட்டுப்பாட்டின் நிரல்களிலுள்ள அட்டவணைப் புலங்களின் உள்ளடக்கம்

  4. பொத்தான்களில் பயன்படுத்தப்படுகின்ற வரைவியல்கள் அல்லது உரை.

    Note Icon

    பொத்தான்களுக்கான சீரமைப்பு தேர்வானது வரைவியல் சீரமைப்பு என அழைக்கப்படுகிறது.


சுட்டி வீல் சுருள்

பயனர் சுட்டி சக்கரத்தை உருட்டும் போது மதிப்பு மாறும் என்பதை அமைக்கிறது.ஒருபோதும் இல்லை: மதிப்பில் மாற்றம் இல்லை.குவியத்தில் இருக்கும்போது: (முன்னிருப்பு) கட்டுப்பாடு குவியத்தில் இருக்கும்போதும், சக்கரம் கட்டுப்பாட்டைச் சுட்டும்போதும் உருட்டும்போதும் மதிப்பு மாறுகிறது. எப்போதும்:சக்கரம் கட்டுப்பாட்டைச் சுட்டும்போதும் உருட்டும்போதும் மதிப்பு மாறுகிறது.எந்தவொரு கட்டுப்பாடும் குவியம் செலுத்த வேண்டிய அவசியம்.

சுருள் பட்டை

நீங்கள் குறித்த உருள்பட்டை வகையை உரைப் பெட்டிக்குச் சேர்க்கிறது.

சுழல் பொத்தான்

எண்ணியல், நாணயம், தேதி, நேரம் ஆகிய புலங்கள் சுழல் பொத்தான்களாகப் படிவத்தில் அறிமுகப்படுத்தப்பட முடியும்.

செயல்

நீங்கள் வலம்வரல் செயல்களைக் கொண்டு உங்களின் சொந்த தரவுத்தள வலம்வரல் பொத்தான்களை வடிவமைக்க முடியும்.

நீங்கள் ஒரு பொத்தானுக்கு அளிக்கக்கூடிய செயல்களை பின்வரும் அட்டவணை விவரிக்கிறது:

செயல்

விளக்கம்

ஒன்றுமில்லை

செயல் நடைபெறவில்லை.

படிவத்தைச் சமர்ப்பி

நடப்புப் படிவத்தின் மற்ற கட்டுப்பாட்டுப் புலத்தில் உள்ளிடப்படுகின்ற தரவுகளை URL கீழ் அமைந்த படிவப் பண்புகள் இல் குறிப்பிடப்படும் முகவரிக்கு அனுப்புகிறது.

நீங்கள் PDF கோப்பை ஏற்றுமதி செய்யும்போது, படிவத்தின் தரவுப் பண்பு "URL" உரைப் பெட்டியில் URL ஐ உள்ளிடுக.

மீட்டமை படிவம்

முன்வரையறுத்த முன்னிருப்புகளுக்காக மற்ற புலங்களில் அமைவுகளை மீட்டமைக்கிறது:முன்னிருப்பு நிலை, முன்னிருப்புத் தெரிவு, முன்னிருப்பு மதிப்பு.

ஆவணம்/ வலைப் பக்கத்தைத் திற

URL கீழ் குறிப்பிடப்படுகின்ற URL ஐத் திறக்கிறது. நீங்கள் இலக்கு சட்டகத்தைக் குறிப்பிட சட்டகம் ஐப் பயன்படுத்தலாம்.

முதல் பதிவு

நடப்புப் படிவத்தை முதல் பதிவுக்கு நகர்த்துகிறது.

முந்தைய பதிவு

நடப்புப் படிவத்தை முந்தைய பதிவுக்கு நகர்த்துகிறது.

அடுத்த பதிவு

நடப்புப் படிவத்தை அடுத்த பதிவுக்கு நகர்த்துகிறது.

கடைசி பதிவு

நடப்புப் படிவத்தை கடைசி பதிவுக்கு நகர்த்துகிறது.

பதிவை சேமி

தேவையென்றால், நடப்புப் பதிவைச் சேமிக்கிறது.

தரவு உள்ளீட்டை நீக்கு

நடப்புப் பதிவியிலுள்ள மாற்றங்களை தலைகீழாக்குகிறது

புதுப் பதிவு

நுழை நிரைக்கு நடப்புப் பதிவை நகர்த்துகிறது.

பதிவை அழிக்கிறது

நடப்புப் பதிவை அழிக்கிறது.

படிவத்தைப் புதுப்பி

நடப்புப் படிவத்தின் மிகவும் சமீபத்தில் சேமிக்கப்பட்ட பதிப்பை மீண்டும் ஏற்றுகிறது.


செயல்படுத்தப்பட்ட

ஒரு கட்டுப்பாட்டுப் புலமானது "இயக்கப்பட்டது" எனும் பண்பைக் கொண்டிருந்தால், (ஆம்), படிவ பயனரால் கட்டுப்பாட்டு புலத்தைப் பயன்படுத்த முடியும். பண்பு முடக்கப்பட்டால், அது இயங்காது (இல்லை). சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கப்படும்.

சொடுக்குவதில் கவனத்திக் குவிக்கவும்.

நீங்கள் இந்தத் தேர்வை "ஆம்" என அமைத்தால், நீங்கள் பொத்தானை அழுத்தும்போது தள்ளு பொத்தான் குவியத்தைப் பெறுகிறது.

சொல் முறிப்பு

ஒன்றுக்கு மேற்பட்ட வரியில் உரையைக் காட்சியளிக்கிறது.உரைப்பெட்டியில் நீங்கல் வரி முறிப்பைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இதனால், உரையின் ஒன்றுக்கும் மேற்பட்ட வரியை உள்ளிடலாம். கைமுறையாக ஒரு வ்ரி முறிப்பை உள்ளிட, உள்ளிடு ஐ அழுத்தவும்.

தசமத் துல்லியம்

எண்ணியல், நாணய புலங்களைக் கொண்டு நீங்கள் தசம புள்ளியின் வலதில் காட்சியளிக்கும் இலக்கங்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க முடியும்.

தன்னியக்க நிரப்பல்

தானிநிரப்பு நீங்கள் ஓர் உள்ளீட்டடைத் தட்டச்சிட தொடங்கும்போது முந்தைய உள்ளீடுகளின் பட்டியலைக் காட்சியளிக்கிறது.

தாமதம்

திரும்பவும் ஏற்படும் நிகழ்வுகளுக்கிடையேயுள்ள தாமத்தை மி.விநாடியில் குறிப்பிடுகிறது.திரும்பவும் ஏற்படும் நிகழ்வுகள் நீங்கள் ஓர் அம்புப் பொத்தானையோ, சுருள்பட்டையின் பின்புலத்தையோ, வலம்வரல் பட்டையிலுள்ள வலம்வரல் பொத்தான்களில் ஒன்றையோ சொடுக்கும்போதும் , சில வேளையில் இடஞ்சுட்டையை அழுத்தியே இருக்கையில் ஏற்படுகிறது. நீங்கள் ஒரு மதிப்பைத் தொடர்ந்து சரியான நேர அலகை உள்ளிடலாம். எ.கா, 2 வி அல்லது 500 மி.வி.

திசையமைவு

ஓர் உருள்பட்டை அல்லது சுழல் பொத்தானுக்கான கிடைமட்ட அல்லது செங்குத்து திசையமைவைக் குறிப்பிடுகிறது.

திரும்பச்செய்

நீங்கள் கட்டுப்பாட்டை சொடுக்கி, சுட்டெலி பொத்தானை அழுத்தி வைத்திருக்கும்போது ஒரு சுழல் பொத்தான் திரும்பச்செய்யும் கட்டுப்பாட்டின் செயலைக் குறிப்பிடுகிறது.

தென்படும்

நேரடி முறையில் கட்டுப்பாடு தென்படுவதை வரையறுக்கிறது. வடிவமை முறையில், கட்டுப்பாடு எப்போதும் தென்படும்.

"ஆம்" (முன்னிருப்பு) எனும் இந்தப் பண்பை அமைப்பதற்கு என்றால், கட்டுப்பாடு திரையில் தோன்றும் என்பது அவசியமில்லை.கட்டுப்பாட்டின் பயனான தென்பாட்டினைக் கணக்கிடும்போது கூடுதல் இடர்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன. சான்றாக, ரைட்டரில் ஒளிந்துள்ள பிரிவில் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடானது தென்படாது, குறைந்தபட்சம் அப்பிரிவுக்குத் தானே தென்படும் வரை.

பண்பு "இல்லை " என அமைந்தால், கட்டுப்பாடு எப்போதுமே நேரடி முறையில் மறைந்திருக்கும்.

பழைய OpenOffice.org 3.1வரையிலான பதிப்புகள் இந்தப் பண்பினை ஆவணங்களைப் படிக்கும்போது பயன்படுத்தும்போதே அதை அமைதியாக அகற்றும்.

தென்படும் அளவு

"மதிப்பு அலகுகள்" இலுள்ள உருள்பட்டையின் அளவைக் குறிப்பிடுகிறது. (உருள் மதிப்பு அதிகபட்சம்" கழித்தல் " (உருள் மதிப்பு குறைந்தபட்சம்")/ 2 மதிப்பானது பின்புலப் பகுதியின் அரைப் பகுதியைக் கொண்டிருக்கும் கட்டைவிரலில் விளையும்.

0 இல் அமைத்தால், கட்டைவிரலின் அகலம் அதன் உயரத்திற்குச் சமமாகும்.

தெரிவை மறை

Specifies whether a text selection on a control remains selected when the focus is no longer on a control. If you set Hide selection to "No", the selected text remains selected when the focus is no longer on the control that contains the text.

தேதி வடிவூட்டல்

தேதி புலங்களைக் கொண்டு தேதி படிக்கப்படுவதற்கான வடிவூட்டலைத் தீர்மானிக்க முடியும்.

Note Icon

அனைத்து வடிவூட்டுப் புலங்களும்( தேதி, நேரம், நாணயம், எண்ணியல்) நீங்கள் உள்ளீட்டை எவ்வாறு உள்ளீடீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அதனை விட்டுப் போனவுடனே தானாகவே தேர்ந்த வடிவூட்டில் வடிவூட்டப்படுகின்றன.


நங்கூரம்

கட்டுப்பாடு நங்கூரமிடப்படும் இடத்தை வரையறுக்கிறது.

நாணய சின்னம்

நாணய புலத்தில், "நாணய சின்னம்" பண்பிலுள்ள வரியுருவையோ சரத்தையோ உள்ளிடுவதன் மூலம் நீங்கள் நாணய சின்னத்தை முன்வரையறுக்க முடியும்.

நிரை உயரம்

அட்டவணை கட்டுப்பாட்டில், நிரை உயரத்திற்காக ஒரு மதிப்பை உள்ளிடுக. நீங்கள் விரும்பினால், செல்லுபடியாகும் அளவீட்டு அலகைத் தொடர்ந்து ஒரு மதிப்பை உள்ளிடுக, எ.கா, 2 cm .

நிலைப்படுத்தல்

தேர்ந்த வலம்வரல் பட்டை கட்டுப்பாட்டில் நிலைப்படுத்தல் உருப்படிகளைக் காட்டவோ மறைக்கவோ குறிப்பிடுகிறது. நிலைப்படுத்தல் உருப்படிகள் பின்வருமாறு: விளக்கச்சீட்டைப் பதிவு செய், நிலைப்படுத்தலைப் பதிவு செய், எண்ணிக்கை விளக்கச்சீட்டைப் பதிவு செய், எண்ணிக்கையை பதிவு செய்.

நிலைமாற்று

தள்ளுப் பொத்தான் நிலைமாற்றிப் பொத்தானாக செயல்பட்டால் குறிப்பிடுகிறது. நீங்கள்நிலைமாற்றி ஐ "ஆம்" என அமைத்தால், "தேர்ந்த" , "தேராத" கட்டுப்பாட்டு நிலைகளை மாற்றலாம். இதை கட்டுப்பாடு குவியத்தில் இருக்கும்போது வெளிப்பட்டை ஐச் சொடுக்கியோ அழுத்தியோ செய்யலாம். "தேர்ந்த" நிலையிலுள்ள பொத்தான் :உள் அழுத்தம்" ஆகத் தோன்றுகிறது".

நேர வடிவூட்டம்

நேர காட்சிக்கு விரும்பிய வடிவூட்டை நீங்கள் வரையறுக்கலாம்.

நேரடி முகமூடி

முகமூடிட்ட புலங்களுடன் நீங்கல் ஒரு நேரடி முகமூடியைக் குறிப்பிட முடியும். ஒரு நேரடி முகமூடி படிவத்தின் முதல் மதிப்புகளைக் கொண்டிருப்பதோடு படிவத்தை பதிவிறக்கத்திற்குப் பிறகு எப்போதும் தென்படும். தொகு க்கான வரியுரு குறியீட்டைப் பயன்படுத்தி பயனர் முகமூடிட்ட புலத்தில் தட்டச்சிட்ட முடிகின்ற உள்ளீடுகளைத் தீர்மானிக்க முடியும்.

Note Icon

நேரடி முகமூடியின் நீளம் எப்பொழுதும் தொகு முகமூடியின் நீளத்திற்கு ஒத்திருக்க வேண்டும். அப்படியில்லையென்றால்,தொகு முகமூடி வெட்டப்பட்டு அல்லது வெற்றிடங்களைத் தொகு முகமூடயின் நீளம் வரை நிரப்புகிறது


படவுரு அளவு

தேர்ந்த வலம்வரல்பட்டையிலுள்ள படவுருக்கள் சிறியதாகவோ பெரியதாகவோ இருப்பதைக் குறிப்பிடுகிறது.

பதிவில் செயல்படுகிறது

தேர்ந்த வலம்வரல் பட்டை கட்டுப்பாட்டில் செயலைக் காட்டவோ மறைக்கவோ குறிப்பிடுகிறது. செயல் உருப்படிகள் பின்வருமாறு: பதிவைச் சேமி, செயல்நீக்கு, புது பதிவு, பதிவை அழி, புதுபிப்பு.

பதிவு குறி

நிரை விளக்கச்சீட்டுகளுடன் முதல் நிரல் காட்டப்பட்டுள்ளதா என்பதைக் குறிப்பிடுகிறது, இதில் நடப்புப் பதிவு ஓர் அம்புக்குறியால் குறிக்கப்படுகிறது.

பல தேர்வு

நீங்கள் பட்டியல் பெட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட உருப்படியைத் தேர அனுமதிக்கிறது.

பாணி

சோதனைப் பெட்டிகளும் தேர்வுப் பொத்தான்களும் முப்பரிமாணம் அல்லது தட்டை தோற்றத்தில் இருப்பதை (முன்னிருப்பு) குறிக்கிறது.

பின்புல நிறம்

பெரும்பாலன கட்டுப்பாட்டுப் புலங்களுக்குப் பின்புல நிறம் கிடைக்கும். நீங்கள் பின்புல நிறம் ஐச் சொடுக்கினால், நீங்கள் தேர்வு செய்யக்கூடிய பல நிறங்களின் பட்டியல் திறக்கப்படும். "செந்தரம்" தேர்வானது கட்டமைப்பு அமைவுகளை ஏற்கிறது. விரும்பிய நிறம் பட்டியலில் இல்லாவிடில், Color உரையாடலில் ஒரு நிறத்தை வரையறுக்க ... பொத்தானைச் சொடுக்கவும்.

பெயர்

ஒவ்வொரு கட்டுப்பாட்டுப் புலமும் படிவமும் "பெயர்" பண்பு கொண்டிருக்கும். அதன் மூலம் அதனை அடையாளமிட முடியும். படிவ மாலுமி இல் தோன்றும் பெயர், அப்பெயரைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டுப் புலத்தை ஒரு பெருமத்திற்குக் குறிக்க முடியும்.புலத்தின் விளக்கச்சீட்டையும் எண்ணையும் பயன்படுத்தி உருவாக்குகிற பெயரை இந்த முன்னிருப்பு அமைவுகள் ஏற்கனவே குறிக்கின்றன.

Note Icon

நீங்கள் பெருமத்துடன் பணி புரிந்தால், கட்டுப்பாட்டின் பெயர்கள் தனித்துவமாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.


ஒன்றாக செயல்படுகின்ற பல்வேறு கட்டுப்பாடுகளை குழுவாக்க, பெயர் பயன்படுகிறது. எ.கா: வானொலிப் பொத்தான்கள். இவ்வாறு செய்ய, குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரே பெயரை வழங்கவும்:ஒரே மாதிரி பெயர்களுடய கட்டுப்பாடுகள் ஒரு குழுவை உருவாக்கும். குழுவாகிய கட்டுப்பாடுகள்குழுப் பெட்டி ஐப் பயன்படுத்தி காட்சிரீதியாகக் குறித்துகாட்டப்பட முடியும்.

பெரிய மாற்றம்

சுருள்பட்டையிலுள்ள வழுக்கியிந் அடுத்து பயனர் சொடுக்கும்போது சேர்க்க அல்லது குறைக்க வேண்டிய மதிப்பைக் குறிப்பிடவும்.

மதிப்பு

மதிப்புஇன் கீழான மறைந்துள்ள கட்டுப்பாட்டில், நீங்கள் மறைக்கப்பட்ட கட்டுப்பாட்டின் மூலம் மரபுவழித்த தரவுகளை உள்ளிட முடியும். படிவத்தை அனுப்பும்போது இந்தத் தரவு மாற்றப்படுகிறது.

மதிப்பு படி

எண்ணியல், நாணய சுழல் பொத்தான்களுக்கான இடைவேளைகள் பொத்தான்களை நீங்கள் முன்னமைக்க முடியும். மதிப்பைக் குறைக்கவும் அதிகரிக்கவும் சுழல் பொத்தான்களின் மேல், கீழ் அம்புகளைப் பயன்படுத்தவும்.

முகமுடியைத் தொகு

பாங்கு புலத்தில் வரியுரு குறியீட்டைக் குறிப்பதன் மூலம், பாங்கு புலத்தில் பயனர் எதனை உள்ளிடலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும்.

சாத்தியமாகும் உள்ளீடு இடங்களைத் தொகு முகமூடியின் நீளம் வரையறுக்கிறது. தொகு முகமூடிக்குத் தொடர்பில்லாத வரியுருக்களைப் பயனர் உள்ளிட்டால், பயனர் புலத்திலிருந்து வெளியேறும்போது உள்ளீடு நிராகரிக்கபடுகிறது. தொகு முகமூடியை வரையறுக்க நீங்கள் பின்வரும் வரியுருக்களை உள்ளீட முடியும்:

வரியுரு

அர்த்தம்

L

உரை மாறிலி. இந்த இடத்தைத் தொகுக்க முடியாது. நேரடி முகமூடிக்கு தொடர்புடைய இடத்தில் வரியுரு காட்சியளிக்கப்படுகிறது.

a

a-z மற்றும் A-Z வரியுருக்கள் உள்ளிடப்பட முடியும். மூலதன வரியுருக்கள் சிறிய எழுத்துக்குறி வரியுருக்களுக்கு மாற்றப்படவில்லை.

A

A-Z வரியுருக்கள் உள்ளிடப்பட முடியும். சிறியஎழுத்துக்குறி எழுத்து உள்ளிடப்பட்டால், அவை தானாகவே மூலதன எழுத்துக்களாக நிலைமாற்றப்படுகிறது.

c

a-z, A-Z, 0-9 ஆகிய வரியுருக்கள் உள்ளிடப்பட முடியும். மூலதன வரியுருக்கள் சிறிய எழுத்துக்குறிகளுக்கு நிலைமாற்ரப்படவில்லை.

C

A-Z, 0-9 வரியுருக்கள் உள்ளிடப்பட முடியும். சிறியஎழுத்துக்குறி எழுத்து உள்ளிடப்பட்டால், அவை தானாகவே மூலதன எழுத்துக்களாக நிலைமாற்றப்படுகிறது.

N

0-9 வரையிலான வரியுருக்கள் மட்டுமே உள்ளிடப்பட முடியும்.

x

அனைத்து அச்சிடக்கூடிய வரியுருக்களும் உள்ளிட்டப்பட முடியும்.

X

அச்சிடப்படக்கூடிய அனைத்து வரியுருக்களும் உள்ளிடப்பட முடியும். சிறியஎழுத்துக்குறி எழுத்து உள்ளிடப்பட்டால், அவை தானாகவே மூலதன எழுத்துக்களாக நிலைமாற்றப்படுகின்றன.


"__.__.2000" நேரடி முகமூடிக்கு, எ.கா,"NNLNNLLLLL" தொகு முகமூடியை வரையறு. இதனால், ஒரு தேதியை உள்ளிடும்போது பயனர் நான்கு இலக்கங்களை மட்டுமே உள்ளிட முடியும்.

முன்னிருப்பு உருள் மதிப்பு

உருள்பட்டைக்கான முன்னிருப்பு மதிப்புகளை அமைக்கிறது.

முன்னிருப்பு உரை

உரைப் பெட்டி அல்லது சேர்க்கைப் பெட்டிக்கான முன்னிருப்பு உரையை அமைக்கிறது.

முன்னிருப்பு தெரிவு

முன்னிருப்பு உள்ளீடாகக் குறிக்க பட்டியல் பெட்டி உள்ளீட்டைக் குறிப்பிடுகிறது

மீட்டமை வகை பொத்தானுக்கு, முன்னிருப்பு தெரிவு உள்ளீடானது பயனரால் மீட்டமை பொத்தான் செயலாக்கப்பட்டால், பட்டியல் பெட்டியின் நிலையை வரையறுக்கிறது.

ஒரு மதிப்பு பட்டியலைக் கொண்டிருக்கும் பட்டியல் பெட்டிக்காக நீங்கள் முன்னிருப்பு தெரிவு உரையாடலைத் திறக்க ... பொத்தானைச் சொடுக்க முடியும்.

முன்னிருப்புத் தெரிவு உரையாடலில், பட்டியல் பெட்டியைக் கொண்டிருக்கும் படிவத்தை நீங்கள் திறந்தபோது தேர்ந்தெடுத்தைப்போல நீங்கள் குறிக்க விரும்பும் உள்ளீடுகளைத் தேர்க.

முன்னிருப்பு தேதி

முன்னிருப்பு தேதியை அமைக்கிறது.

முன்னிருப்பு நிலை

ஒரு தேர்வோ சோதனைப் பெட்டியோ முன்னிருப்பால் தேர்ந்தெடுக்கப்படுவதைக் குறிப்பிடுகிறது.

மீட்டமை பொத்தானுக்கு, அப்பொத்தான் பயனரால் செயலாக்கப்பட்டால் நீங்கள் கட்டுப்பாட்டின் நிலையை வரையறுக்க முடியும்.

குழுவாக்கப்பட்ட தேர்வுப் புலங்களுக்கு, முன்னிருப்பு அமைவுகள் பொறுத்து அமையும் குழுவின் நிலையானது " முன்னிருப்பு நிலை" பண்பால் வரையறுக்கப்படுகிறது.

முன்னிருப்பு நேரம்

முன்னிருப்பு நேரத்தை அமைக்கிறது.

முன்னிருப்பு மதிப்பு

கட்டுப்பாட்டுப் புலத்திற்கான முன்னிருப்பு மதிப்பை அமைக்கிறது. எ.கா, படிவம் திறக்கும்போது முன்னிருப்பு மதிப்பு உள்ளிடப்படும்.

மீட்டமை வகை பொத்தானுக்கு, முன்னிருப்பு மதிப்பு உள்ளீடானது பயனரால் மீட்டமை பொத்தான் செயலாக்கப்பட்டால், பட்டியல் பெட்டியின் நிலையை வரையறுக்கிறது.

முன்னிருப்புப் பொத்தான்

"முன்னிருப்புப் பொத்தான்" பண்பானது திரும்பு விசையை நீங்கள் அழுத்தும்போது செயல்படப்படும் தொடர்புடைய பொத்தானைக் குறிப்பிடுகிறது நீங்கள் உரையாடலையோ படிவத்தையோ திறந்தாலோ மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம். இப்பண்புடைய பொத்தான், முன்னிருப்பு பொத்தான் ஆகும்.

Note Icon

ஆவணத்துக்கிடையேயான ஒற்றைப் பொத்தானுக்கு மட்டுமே இப்பண்பை அளிக்க வேண்டும்.


வலைப் பக்கம் படிவங்களைப் பயன்படுத்தும்போது, தேடும் முகமூடிகளில் நீங்கள் இந்தப் பண்பைக் காணலாம். இவை உரை புலம், அனுப்பு வகை பொத்தானைக் கொண்டிருக்கும் தொகு முகமூடிகளாகும். தேடும் சொல் உரை புலத்தில் உள்ளிடப்படுவதோடு, பொத்தான் செயலாக்கப்படுவதின் மூலம் தேடல் ஆரம்பமாகிறது. முன்னிருப்பு பொத்தானாக, பொத்தான் வரையறுக்கப்படுகிறது என்றாலும், தேடலை ஆரம்பிக்க, தேடும் சொல்லை உள்ளிட்ட பிறகு, உள்ளிடு ஐ அழுத்தவும்.

முன்னொட்டுச் சின்னம்

நீங்கள் நாணய புலத்தைப் பயன்படுத்தும்போது எண்ணுக்கு முன்னோ பின்னோ நாணய சின்னம் காட்சியளிப்பதைத் தீர்மானிக்கிறது. முன்னிருப்பு அமைவான நாணயம் சின்னங்கள் முன்னொட்டுகள் அல்ல.

மூன்றுநிலை

உண்மை மற்றும் தவறு மதிப்புகளை தவிர்த்து இணைந்த தரவுத்தளத்தின் சுழிய மதிப்புகளையும் ஒரு சோதனைப் பெட்டி பிரதிநிதிக்க முடியுமா என்பதைக் குறிப்பிடுகிறது. மூன்று நிலைகளை தரவுத்தளம் ஏற்றால் மட்டுமே இந்தச் செயலாற்றி கிடைக்கும்: உண்மை, பிழை மற்றும் சுழியம்.

Note Icon

HTML படிவங்களுக்கான இல்லை எனும் தரவுத்தளம் படிவங்களுக்கு மட்டுமே "மூந்நிலை" பண்பானது, வரையறுக்கப்படுகிறது.


வடிகட்டுதல்/வகைபிரித்தல்

தேர்ந்த வலம்வரல் பட்டை கட்டுப்பாட்டில் வடிக்கட்டும் வகைப்பிரிக்கும் உருப்படிகளை காட்டவோ மறைக்கவோ குறிப்பிடுகிறது. வடிக்கட்டும் வகைப்பிரிக்கும் உருப்படிகள் பின்வருமாறு:ஏறுவரிசையில் வகைப்பிரி, இறங்குவரிசையில் வகைப்பிரி, வகைப்பிரி, தானியக்க வடிகட்டி,முன்னிருப்பு வடிகட்டி, வடிகட்டியைச் செயல்படுத்து, வடிகட்டி/வகைப்பிரியை மீட்டமை.

வடிவமைப்பு

கட்டுப்பாட்டிற்கான வடிவூட்டு குறியீட்டைக் குறிப்பிடுகிறது. வடிவூட்டு குறியீட்டைக் குறிப்பிட ... பொத்தானைச் சொடுக்குக.

வரி எண்ணிக்கை

"இழுத்துப்போடு " பண்புடனான சேர்க்கைப் பெட்டிகளுக்கு, இழுத்துப்போடு பட்டியலில் எத்தனை வரிகள் காட்சியளிக்கப்பட வேண்டுமென நீங்கள் குறிப்பிட முடியும். இழுத்துப்போடு தேர்வில் இல்லாத கட்டுப்பாட்டுப் புலங்களைக் கொண்டு, வரிகளின் காட்சியானது கட்டுப்பாட்டுப் புலத்தின் அளவினாலும் எழுத்துரு அளவினாலும் குறிப்பிடப்படும்.

வரைவியல்

பிம்பப் பொத்தான் "வரைவியல்" பண்பு கொண்டுள்ளது. "வரைவியல்" பண்பானது, பொத்தானில் காட்சியளிக்கப்பட வேண்டுமென நீங்கள் விரும்பிய வரைவியல் பாதையையும் கோப்புப் பெயரையும் குறிப்பிடுகிறது. நீங்கள் வரைவியல் கோப்பை ... பொத்தானுடன் தேர்வு செய்தால்,பாதையும் கோப்பு பெயரும் உரைப் பெட்டியில் தானாகச் சேர்க்கப்படுகிறது.

வலம்வரல்

தேர்ந்த வலம்வரல் பட்டை கட்டுப்பாட்டில் வலம்வரல் உருப்படிகளைக் காட்டவோ மறைக்கவோ குறிப்பிடுகிறது. வலம்வரல் உருப்படிகள் பின்வருமாறு: முதல் பதிவு,முந்தைய பதிவு, அடுத்தபதிவு, கடைசி பதிவு.

வலம்வரல் பட்டை

அட்டவணைக் கட்டுப்பாட்டில் வலம்வரல் பட்டையைக் காட்சியளிப்பதைக் குறிப்பிடுகிறது.

வாசிக்க-மட்டும்

"வாசிக்க மட்டும்" பண்பை, பயனர் உரையை உள்ளிடக்கூடிய அனைத்துக் கட்டுபாடுகளுக்கும் அளிக்க முடியும். நீங்கள் வாசிக்க மட்டும் பண்பை, தரவுத்தளத்திலிருந்து வரைவியல்களைப் பயன்படுத்தும் பிம்ப புலத்திற்கு அளித்தால், பயனரால் தரவுத்தளத்தினுள் புது வரைவியல்களை நுழைக்கமுடியாமல் போய்விடும்.

விளக்கச்சீட்டு

"விளக்கச்சீட்டுகள்' பண்புகள் படிவத்தில் காட்சியளிக்கப்படுகின்ற கட்டுபாட்டுப் புல விளக்கச்சீட்டை அமைக்கிறது. இப்பண்பு அட்டவணை கட்டுப்பாட்டுப் படிவங்களிலுள்ள தரவுப் புலத்தின் நிரல் தலைப்பகுதியையோ தென்படும் விளக்கச்சீட்டையோ தீர்மானிக்கிறது.

நீங்கள் ஒரு புது கட்டுப்பாட்டை உருவாக்கும்போது, "பெயர்" பண்பில் முன்வரையறுத்த விவரமானது கட்டுப்பாட்டைப் பெயரிடுவதற்கு.முன்னிருப்பாகப் பயன்படுகிறது. விளக்கச்சீட்டானது, கட்டுப்பாட்டுப் புல பெயரையும் கட்டுப்பாட்டை எண்ணிடும் முழு எண்ணையும் கொண்டிருக்கிறது. (எ.கா, கட்டளை பொத்தான்1). "தலைப்பு" பண்பைக் கொண்டு , நீங்கள் கட்டுப்பாட்டுக்கு இன்னொரு விவரத்தை அளிக்கலாம். இதனால், கட்டுப்பாட்டின் செயலாற்றியை விளக்கச்சீட்டு பிரதிபலிக்கிறது. பயனருக்குத் தென்படும் கட்டுப்பாட்டிற்கு வெளிப்படுத்தும் விளக்கச்சீட்டை அளிப்பதற்கு இந்த உள்ளீட்டை மாற்றவும்.

பல- வரி தலைப்பை உருவாக்க, அம்பு பொத்தானைப் பயன்படுத்தி சேர்க்கைப் பெட்டியைத் திறக்கவும். நீங்கள் Shift++உள்ளிடு.ஐ அழுத்தி நீங்கள் வரி முறிப்பை உள்ளிட முடியும்.

Note Icon

பயனருக்குத் தென்படும் முகப்பிலுள்ள படிவ தனிமத்தை பெயரிவதற்காக மட்டுமே "தலைப்பு" பண்பு பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் பெருமங்களுடன் செயல்பட்டால், ஒரு கட்டுப்பாடு எப்போதுமே "பெயர்" பண்பின் வழியாக குறிப்பிடுவதை அதன் இயக்க நேரத்தில் கவனிக்கவும்.


விளக்கச்சீட்டுப் புலம்

கட்டுப்பாட்டின் விளக்கச்சீட்டுக்கான மூலத்தைக் குறிப்பிடுகிறது.தரவுத்தளப் புலத்தின் பெயருக்குப் பதிலாக விளக்கச்சீட்டின் உரை பயன்படுத்தப்படும். எ.கா, வடிகட்டி மாலுமி, தேடு உரையாடல், அட்டவணை பார்வையில் ஒரு நிரல் பெயராகப் பயன்படுகிறது.

விளக்கச்சீட்டின் ஒரு வரியுருவை நினவூட்டலாக வரையறுக்க, விளக்கச்சீட்டில் வரியுருவின் முன்னே ஓர் அலைக்குறி (~) வரியுருவை நுழை. இதன் மூலம், விசைப்பலகையிலுள்ள வரியுருவை அழுத்தி பயனர் இந்தக் கட்டுப்பாட்டை அணுகலாம்.

வானொலிப் பொத்தான்களைப் பயன்படுத்தும்போது, குழுச் சட்டகத்தின் உரையை மட்டுமே விளக்கச்சீட்டுப் புலமாகப் பயன்படுத்த முடியும். இவ்வுரையானது ஒரே குழுவின் அனைத்து வானொலிப் பொத்தான்களுக்கும் செயல்படுகிறது.

நீங்கள் உரைப் புலத்திற்கு அடுத்துள்ள ... இல் சொடுக்கினால், விளக்கச்சீட்டுப் புலத் தெரிவு உரையாடலைப் பார்க்கலாம். பட்டியலிலிருந்து ஒரு விளக்கச்சீட்டைத் தேர்க.

கட்டுப்பாட்டிற்கும் ஒப்படைத்த விளக்கச்சீட்டுப் புலத்திற்கும் இடையேயுள்ள இணைப்பை அகற்ற ஒப்படைகள் இல்லை பெட்டியைச் சோதிக்கவும்.