தொடர்களை நிரப்பு
இந்த உரையாடலிலுள்ள தேர்வுகளுடன் தானாகவே தொடர்களை உண்டாக்கும். திசைகள், ஏற்றம்,நேர அலகு, தொடர் வகை போன்றவற்றைத் தீர்மானிக்கவும்.
ஒரு தொடரை நிரப்பும் முன், முதலில் கல வீச்சைத் தேர்க.
அனுமானித்திருந்த நிறைவு விதிகளைப் பயன்படுத்தி தானாகவே ஒரு தொடரைத் தொடர்வதற்கு, தானிநிரப்பு தேர்வை தொடரை நிரப்பு உரையாடலைத் திறந்த பிறகு தேர்ந்தெடுக.
திசை
தொடர் உருவாக்கத்தின் திசையை வரையறுக்கிறது.
கீழ்
இறுதி மதிப்பின் வரையறுத்த அதிகரிப்பைப் பயன்படுத்தி, தேர்ந்த கல வீச்சில் கீழ்நோக்கிய தொடரை உருவாக்குகிறது.
வலது
இறுதி மதிப்பின் வரையறுத்த அதிகரிப்பைப் பயன்படுத்தி, தேர்ந்த கல வீச்சுக்கிடையே இடதிலிருந்து வலதுக்கு இயங்குகிற ஒரு தொடரை உருவாக்கிறது.
மேல்
இறுதி மதிப்பின் வரையறுத்த அதிகரிப்பைப் பயன்படுத்தி, நிரலின் கல வீச்சில் மேல்நோக்கிய தொடரை உருவாக்குகிறது.
இடது
இறுதி மதிப்பின் வரையறுத்த அதிகரிப்பைப் பயன்படுத்தி,தேர்ந்த கல வீச்சில் லவதிலிருந்து இடதுக்கு இயங்குகிற ஒரு தொடரை உருவாக்கிறது.
தொடர் வகை
தொடர் வகையை வரையறுக்கிறது. நேரியல், வளர்ச்சி, தேதி தானிநிரப்பு ஐத் தேர்ந்தெடுக.
நேரியல்
வரையறுத்த அதிகரிப்பையும் நிறைவு மதிப்பையும் பயன்படுத்தி நேரியல் தொடரை உருவாக்குகிறது.
வளர்ச்சி
வரையறுத்த உயர்வையும் நிறைவு மதிப்பையும் பயன்படுத்தி வளர்ச்சியான தொடரை உருவாக்குகிறது.
தேதி
வரையறுத்த உயர்வையும் நிறைவு தேதியையும் பயன்படுத்தி தேதி தொடரை உருவாக்குகிறது.
தானிநிரப்பு
நேரடியாக ஒரு தொடரைத் தாளில் உருவாக்குகிறது. தானிநிரப்புச் செயலாற்றி தனிப்பயனாக்கப்பட்ட பட்டியல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. எ.கா, ஜனவரி ஐ முதல் கலத்தில் உள்ளிடுவதன் மூலம், LibreOffice - விருப்பங்கள்கருவிகள் - தேர்வுகள் - LibreOffice கல்க்- வரிசைபடுத்தும் பட்டியல்கள் இன் கீழ் வரையறுக்கப்பட்ட பட்டியலைப் பயன்படுத்தி தொடர் முழுமையடைகிறது.
வரையறுத்த பாங்கைப் பயன்படுத்தி ஒரு மதிப்பு தொடரை தானிநிரப்பு முழுமையாக்க முயலுகிறது.1,3,5 எனும் தொடர்கள் 7,9,11,13 மேலும் என தானாகவே முழுமைப்படுப்படுகிறது. தேதி, நேரம் தொடர்களோ 14 நாட்கள் இடைவெளி எனப் பயன்படுத்தி முழுமைப்படுப்படுகின்றன. எ.கா 01.01.99 க்குப் பிறகு 15.01.99 என அமைகிறது.
அடுத்துள்ள கலங்களின்தரவுதளத்தில் தானாக நிரப்புதல்
நேர அலகு
இந்தப் பரப்பில் நீங்கள் ஆசைப்பட்ட நேர அலகைக் குறிப்பிடலாம். தொடர்கள் வகைபரப்பில் தேதி தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த பரப்பு இயக்கத்தில் இருக்கும்.
நாள்
தேதி தொடர் வகையைப் பயன்படுத்துக. இத்தெரிவு வார ஏழு நாள்களைப் பயன்படுத்தி ஒரு தொடரை உருவாக்கும்.அதிகரிப்பின் அலகு என்பது ஒரு நாள் ஆகும்.
வாரநாள்
தேதி தொடர் வகையைப் பயன்படுத்துக. இத்தெரிவு வாரத்தின் ஐந்து நாள்களைப் பயன்படுத்தி ஒரு தொடரை உருவாக்கும்.அதிகரிப்பின் அலகு என்பது ஒரு நாள் ஆகும்.
மாதம்
தேதி தொடர் வகையைப் பயன்படுத்துக. இத்தேர்வானது அதிகரிப்பின் அலகான மாதத்தை உருவாக்கும்.
ஆண்டு
தேதி தொடர் வகையைப் பயன்படுத்துக. இத்தேர்வானது அதிகரிப்பின் அலகான வருடத்தை உருவாக்கும்.
தொடக்க மதிப்பு
>தொடருக்கான தொடக்க மதிப்பைத் தீர்மானிக்கிறது. எண்கள், தேதிகள் அல்லது தேதிகள் போன்றவற்றைப் பயன்படுத்துக.
நிறைவு மதிப்பு
தொடருக்கான நிறைவு மதிப்பைத் தீர்மானிக்கிறது. எண்கள், தேதிகள் அல்லது நேரங்கள் பேன்றவற்றைப் பயன்படுத்துக.
கூடுதல்
"அதிகரிப்பு" என்பது கொடுக்கப்பட்ட ஒரு மதிப்பு அதிகரிக்கும் அளவைக் குறிக்கிறது. ஒவ்வொரு படியிலும் தேர்ந்த வகை தொடர் அதிகரிப்பதைக் கொண்டு மதிப்பினைத் தீர்மானிக்கிறது.நேரியல், வளர்ச்சி அல்லது தேதி தொடர் வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே உள்ளீடுகள் செய்யப்படும்.