தேர்வுகள்

உரை ஒருகாலங்காட்டல், அச்சுப்பொறி அமைவுகள் உட்பட உங்களின் விளக்கச்சீட்டுகளுக்கோ வணிக அட்டைகளுக்கோ கூடுதல் தேர்வுகளை அமைக்கிறது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - புதிய - விளக்கச்சீட்டுகள் - தேர்வுகள் கீற்றைத் தேர்க

கோப்பு - புதிய - வணிக அட்டைகள் - தேர்வுகள் கீற்றைத் தேர்க


பக்கம் முழுதும்

விளக்கச்சீட்டுகள் அல்லது வணிக அட்டைகளின் முழுப்பக்கத்தை உருவாக்குகிறது.

ஒற்றை விளக்கச்சீட்டு

பக்கத்தில் ஒற்றை விளக்கச்சீட்டையோ வணிக அட்டையையோ அச்சிடுகிறது.

நிரல்

உங்கள் பக்கத்தில் ஒரு வரிசையில் இருக்கவேண்டும் என நீங்கள் விரும்பும் விளக்கச்சீட்டுகள் அல்லது வணிக அட்டைகளின் எண்ணிக்கையை உள்ளிடுக.

நிரை

>உங்கள் பக்கத்தில் இருக்கவேண்டும் என நீங்கள் விரும்பும் விளக்கச்சீட்டுகள் அல்லது வணிக அட்டைகள் ஆகியவற்றின் நிரைகளின் எண்ணிக்கையை உள்ளிடுக.

உள்ளடக்கங்களை ஒருகாலங்காட்டலாக்குக

நீங்கள் ஒற்றை விளக்கச்சீட்டு அல்லது வணிக அட்டையைத் தொகுக்க அனுமதிப்பதுடன் நீங்கள் ஒருங்கிணை விளக்கச்சீட்டு பொத்தானைச் சொடுக்கியவுன் பக்கத்தில் இருக்கும் விளக்கச்சீட்டுகள் அல்லது வணிக அட்டைகளின் உள்ளடக்கங்களை புதுப்பிக்கிறது.

விளக்கச்சீட்டுகளை ஒத்திசை

நீங்கள் விளக்கச்சீட்டுகள் அல்லது வணிக அட்டைகளை உருவாக்கியவுடன் தேர்வுகள் கீற்று இலுள்ள ஒருங்கிணை உள்ளடக்கங்கள் ஐத் தேர்ந்தால் உங்கள் ஆவணத்தில் மட்டுமே ஒருங்கிணை விளக்கச்சீட்டுகள் பொத்தான் தோன்றுகிறது.

பக்கத்தில் எஞ்சியிருக்கும் விளக்கச்சீட்டுகள் அல்லது வணிக அட்டைகளுக்கு மேல் இடது விளக்கச்சீட்டுகள் அல்லது வணிக அட்டைகளின் உள்ளடக்கங்களை நகலெடுக்கிறது.

அச்சுப்பொறி

தற்போது தேர்ந்த அச்சுப்பொறியின் பெயரைக் காட்சியளிக்கிறது.

அமைப்பு

அச்சுப்பொறி அமைப்பு உரையாடலைத் திறக்கிறது.